Also Watch
Read this
By: Manigandan Raja

தமிழகத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தை வெளியிட்டது ரெட் ஜெயன்ட்
நடிகர் ரஜினிகாந்தை, இன்பன் உதயநிதி சென்னையில் உள்ள அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. சந்திப்பு தொடர்பான புகைப்படத்தையும் இன்பன் உதயநிதி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜெயிலர் 2’ காரணமாக ‘ஓம்’ வெளியீடு ஒத்திவைப்பு

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, நடிகர் தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், அக்டோபர் 16-ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது இப்படம் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மூக்குத்தி அம்மன் 2’ வெளியீட்டு உரிமையை பெற்ற ரெட் ஜெயன்ட்

நயன்தாரா நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன்- 2’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved