Also Watch
Read this
By: Manigandan Raja

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முதல் பாடல் வரும் 21-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், மோகன்லால், ஹிருத்திக் ரோஷன், சிவராஜ் குமார், நந்தமுரி பாலகிருஷ்ணா, விஜய் சேதுபதி என பிரபல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவாகும் படம் என்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் மீது பெரிய ஆவல் எழுந்துள்ளது.
நடிகர் பவிஷ் பிறந்தநாள்: "அட்டாக்கர்" படக்குழு வாழ்த்து
நடிகர் பவிஷின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘அட்டாக்கர்’ திரைப்படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்திடம் இணை இயக்குநராக இருந்த தாமோ நாகபூஷ்ணம் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தினேஷ் ராஜ் தயாரிக்கிறார்.

இந்த படம் வாலிபால் விளையாட்டை பிரதான கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர் சி ஆகியோரின் மகளான அவந்திகா சுந்தர், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
It : Welcome to Derry" பிரபல ஆங்கிலத் திகில் தொடர்
பிரபல திகில் திரைப்படத் தொடரான "IT"-இன் பின்னணியைக் கொண்ட "It: Welcome to Derry" என்ற தொடர், அமெரிக்கத் தொலைக்காட்சியான HBO-வில் இரண்டாவது சீசனுக்காக அதிகாரப்பூர்வமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பிரபல எழுத்தாளர் ஸ்டீபன் கிங்-கின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்தொடர், மெய்ன் மாகாணத்தின் "டெர்ரி" நகரில் 1962-ஆம் ஆண்டு நடக்கும் சம்பவங்களை விவரிக்கிறது. உருமாறும் கொடூர கோமாளியான "பென்னிவைஸ்" கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய பில் ஸ்கார்ஸ்கார்ட் ((Bill Skarsgard )), இரண்டாவது சீசனிலும் மீண்டும் நடிக்கவுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved