Also Watch
Read this
By: Manigandan Raja

அக்டோபர் 1-ல் திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு
கணேஷ் பாபு இயக்கத்தில் ரவிமோகன் நடிப்பில் உருவாகி வரும் கராத்தே பாபு திரைப்படத்தை வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல்வாதி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப சூழல், சந்திக்கும் சவால்களை அடிப்படையாக வைத்து திரைப்படம் உருவாகி வருகிறது. சாம் சி.எஸ் இசையில் உருவாகும் இப்படத்தில் நாசர்,கே.எஸ்.ரவிக்குமார், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
'TOXIC' படத்தின் புதிய போஸ்டர் வெளியீட்டு
யாஷின் 'TOXIC' திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

1940 முதல் 70 கால கட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் நேடியா ((Nadia)) என்ற கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடித்துள்ளார். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'TOXIC' திரைப்படம் ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியாகிறது.