Also Watch
Read this
By: Manigandan Raja

பிராட் பீக் மலைச் சிகரத்தில் திடீர் பனிச்சரிவு
பாகிஸ்தானில் வடக்குப் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய பிராட் பீக்((Broad Peak )) மலைச் சிகரத்தில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்ட நிலையில், நேபாளத்தைச் சேர்ந்த பிரபல மலையேற்ற வீரரான நிம்ஸ் டாய் தலைமையில் சென்ற 10 பேர் பனிச்சரிவில் சிக்கி மாயமாகினர்.
பனிச்சரிவுக்குப் பின் அந்த குழுவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. வானிலை நிலவரங்களுக்கு ஏற்ப, மீட்பு நடவடிக்கைகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம் CEO துரோவ் பயங்கரவாதி - ரஷ்யா
டெலிகிராம் சிஇஓ துரோவ் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை புரிவதாக கூறி அவருக்கு எதிராக சர்வதேச அளவில் ரஷ்ய அரசு கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், ரஷ்யாவுக்கு துரோவ் பதிலடி கொடுத்துள்ளார்.

டெலிகிராம் செயலியை தணிக்கை செய்ய வேண்டும் எனும் கோரிக்கைகளை மறுத்ததால், ரஷ்யா தன்னை ஒரு "பயங்கரவாதி" என்று முத்திரை குத்தியுள்ளதாக எக்ஸ் தளத்தில் துரோவ் பதிவிட்டுள்ளார்.
ரஷ்ய சட்டத்தின்படி இணையத்தில் தகவல்களை வெளியிடுவதற்கு தனக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இணையத்திலிருந்து யார் யாரைத் தடை செய்யலாம் என்பதில் ரஷ்யா குழப்பத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.