Also Watch
Read this
By: Manigandan Raja

தென்மேற்கு பருவ மழை குறைந்ததால் சாகுபடி பாதிப்பு
நீலகிரி மாவட்டம் உதகையில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ், அவரை, சௌசௌ உள்ளிட்டவை மற்றும்
புருக்கோலி, சுகுனி உள்ளிட்ட சைனீஸ் காய்கறிகளும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் உதகையில் இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் பெய்யக்கூடிய தென்மேற்கு பருவம் மழையின் தாக்கம் முற்றிலுமாக குறைந்ததால் பருவமழையை நம்பி விளைவிக்கப்படும் மழை காய்கறி சாகுபடிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மலைக் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதில் குறிப்பாக கேரட் ஒரு கிலோ 80 முதல் 100 (முன் 60 - 70) வரையிலும், உருளைக்கிழங்கு 50 முதல் 63 வரையிலும், (இப்போது 90 ) பீட்ரூட் 50 முதல் 70 வரையிலும், பீன்ஸ் 85 முதல் 100 வரையிலும், - (( இப்போது 200)) பட்டாணி: 250 முதல் 300 (முன் 200 )வரை விற்பனை ஆகிறது.
80 கிலோ கொண்ட கேரட் மூட்டை 1500 முதல் 2500 வரையிலும், 70 முதல் 80 கிலோ வரை எடை கொண்ட பீட்ரூட் 2 ஆயிரம் முதல் 3300 வரையிலும், 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை இரண்டாயிரம் முதல் 3500 யிலும் தரத்திற்கேற்ப விற்கப்படுகிறது.
மேலும் வரும் நாட்களில் மழையின் தாக்கம் குறைந்து, நீர் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்தால் வரும் நாட்களிலும் இந்த மலைக் காய்கறிகளின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.