Also Watch
Read this
By: Manigandan Raja

கூடலூரை அடுத்த தேவர் சாலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்துறை கல்லிங்கரை மூன்றாம் மயில் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகளின் தொந்தரவு அதிகரித்து காணப்படுகிறது.
இரவு பகலாக அப்பகுதியில் காட்டு யானைகள் சுற்றி சுற்றித் திரிவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அப்பகுதியினர் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்,
இன்று காலை காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
காலை நேரம் என்பதால் பள்ளிக்குழந்தைகள் பொதுமக்கள் பணிகளுக்கு செல்லும் நேரத்தில் வனத்துறையினர் காட்டு யானையை விரட்டியதால் இரண்டு காட்டு யானைகள் சாலையில் உலா வந்ததது. இந்நிலையில் வனத்துறையினர் இப்பகுதியில் காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது ஆகவே யாரும் சாலையில் வர வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை ஒலி
எழுப்பினர்.
காலை நேரத்தில் காட்டு யானை விரட்டுவதால் பள்ளி குழந்தைகள் மற்றும் பணிக்கு செல்பவர் இயல்பு வாழ்க்கை பாதிப்பதாக வனத்துறையினருக்கும் பொது மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்றிணைந்து வனத்துறையினரின் வாகனத்தை சிறை பிடித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரையும் காவல்துறையினரையும் வருவாய் துறைமுரையும் அப்பகுதியினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறி இரவு பகல் பாராமல் இப்பகுதியில் சுற்றி தெரியும் காட்டு யானைகளை கும்கி யானையின் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.
வனப்பகுதியிலிருந்து காட்டு யாணைகள் வராதவாறு கண்காணிக்க வேண்டும் புதைந்து கிடக்கும் அகலிகளை உடனடியாக தூர்வாரி வனவிலங்குகளை வனப்பகுதியில் இருந்து
வெளியே வராதவாறு கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுடன் அப்பகுதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.