Also Watch
Read this
By: Manigandan Raja

நீலகிரி மாவட்டம் உதகை எச்பிஎப் பகுதியில் மத்திய அரசின் சினிமா படச்சுருள், உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்து வந்த இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை நழிவடைந்ததை தொடர்ந்து தொழிற்சாலை தற்போது மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீப காலமாக இந்த தொழிற்சாலை வளாகத்திற்க்குள் திருட்டுத்தனமாக அத்துமீறி சிலர் நுழைந்து மண் மற்றும் கற்களை உடைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த மண்ணில் வெள்ளி துகள்கள் கிடைப்பதாக கூறி ஒரு சிலர் மண்களை திருட்டுத்தனமாக திருடி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் அத்துமீறி சிலர் நுழைந்ததாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் புதுமந்து காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது உதகை கணபதி நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ், பிரதீப், நிதிஷ்குமார் உள்ளிட்ட 6 பேரை புதுமந்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து உதகை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் வசந்தகுமார் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சுமார் 40க்கும் மேற்பட்ட மண் மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் தலைமறைவாக இருந்த மணிவண்ணன், ஜெலில், ராஜேஷ்குமார் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தும் காப்பு காட்டிற்குள் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து திருட்டுதனமாக மண்களை கடத்திய குற்றத்திற்காக புதுமந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.