news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மக்களின் நகைகளை மறுஅடகு வைத்து ரூ.50 லட்சம் மோசடி
tv

Also Watch

tv

Read this

மக்களின் நகைகளை மறுஅடகு வைத்து ரூ.50 லட்சம் மோசடி

சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கூட்டுறவு சங்க செயலாளர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எஸ் கொடிக்களம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. எஸ் .கொடிக்குளம், சேமனுார், உரத்துார், அனுமநேரி உள்ளிட்ட ஏழு கிராமங்களை சேர்ந்த மக்கள் நகை அடகு கடன் மற்றும் விவசாய பயிர் கடன் பெற்று பயனடைந்து வந்தனர்.

2024 முதல் 2026ல் அடகு வைத்த நகைகளை செயலாளர் சிவா பிரபு, இராமநாதபுரத்தில் உள்ள தனியார் அடகுக்கடைகளில் ரூபாய் 50 லட்சத்திற்கு மேல் அடகு வைத்து கையாடல்
செய்துள்ளார். அதேபோல் விவசாய பயிர் கடன் வாங்கியவர்களிடம் மீண்டும் கடன் தொகையை வாங்கிக்கொண்டு வரவு வைக்காமல் ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார்.

2024 முதல் 26 ஆண்டு வரை சுமார் 400-க்கும் மேற்பட்டவர்களிடம் நகை அடகு கடன் மற்றும் விவசாய பயிர் கடன் என ஒன்றரை கோடி ரூபாய் வரை மோசடி செய்து கையாடல்
செய்துள்ளார்.


நகை அடகு கடன் மோசடி குறித்து பரமக்குடி கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் ரத்தினவேல் புகாரில், இராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து சிவாபிரபுவை தேடி வந்தனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி, எஸ்.ஐ.,க்கள் நந்தகுமார், மாசாணம், எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் உள்ளிட்டோர் இராமநாதபுரம் லாட்ஜில் தங்கி இருந்த அவரை கைது செய்தனர்.

இராமநாதபுரம் ஜே.எம்.,-1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். எஸ்.கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு
வைத்த நகைகளை தனியாரிடம் மறு அடகு வைத்து ரூபாய் 50 லட்சம் வரை மோசடி செய்ததாக செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
உதகையில் காய்கறிகளின் வரத்து குறைவால் விலை உயர்வு

உதகையில் காய்கறிகளின் வரத்து குறைவால் விலை உயர்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பழவேற்காட்டில் அமைச்சர் ஸ்ரீநாத் படகில் பயணித்து ஆய்வு

0
10 mins agoshare
அமைச்சர் ஸ்ரீநாத்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau