Also Watch
Read this
By: Manigandan Raja

நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை பகுதியில் இயங்கி வந்த தேயிலைத் தோட்டத்தின் குத்தகை கடந்த
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காலாவதியானது இதனை அடுத்து இப்பகுதியில் வசித்த பொதுமக்களுக்கு மாற்றிய இடம் வழங்குவதாக கூறியும் இதை பாதுகாக்கப்பட்ட
வனப்பகுதியாக மாற்றுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மக்களை இடம் பெயர வைக்க போதிய முயற்சிகளை அரசு எடுத்து வந்தது.
மேலும் அங்கு வசித்து வந்த மக்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காலி செய்ய சொல்லி உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் பல அங்கிருந்து வெளியேறினர் ஒரு சிலர் இன்னும் அங்குள்ள பகுதிகளில் வசித்து வந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
நாள்தோறும் மாஞ்சோலை ஊத்து குதிரை வெட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி அரசு பேருந்துகள் இயங்கி வந்த நிலையில் இன்று மாஞ்சோலை செல்வதற்காக பேருந்தில் அமர்ந்திருந்த பொது மக்களை உடனடியாக வெளியேற வேண்டும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மணிமுத்தாறு சோதனைச் சாவடி பகுதியில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு அது அறிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக நீர் பூத்த நெருப்பாக இருந்த இந்த விவகாரம் தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது.