Also Watch
Read this
By: Manigandan Raja

குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது
வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் குற்றமாக கருதி மூன்றாடுகள் சிறைத்தண்டனை விதிக்க வழிவகுக்கும் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதும், குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேறியது.
பொதுத்தேர்வுகள் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
பொதுத்தேர்வுகள் சட்டத்திருத்த மசோதா, மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

நீட் வினாத்தாள் கசிவு சம்பவத்திற்கு பிறகு தேர்வு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட பொதுத்தேர்வுகள் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. அதன் தொடர்ச்சியாக மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார்.