Also Watch
Read this
By: Manigandan Raja

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்ய, முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழ்நாட்டிற்கு தினமும் 3,500 கனஅடி நீரை 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்ற உத்தரவை உறுதி செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆக.3-ல் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்?

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அமைச்சர்கள் பட்டியலை ஆகஸ்ட் 2 ஆம் தேதி காங்கிரஸ் மேலிடம் இறுதி செய்யும் என கூறப்படுகிறது.
அமைச்சரவையில் சாதி, சமூகம் மற்றும் பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்குவது தொடர்பாக காங்கிரஸ் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஜிப்லைன் சாகசத்தின்போது திடீர் தொழில்நுட்ப கோளாறு

மகாராஷ்டிராவில் ஜிப்லைன் சாகசத்தின்போது ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறால் 3 ஆயிரத்து 500 அடி ஆழ பள்ளத்தாக்குக்கு மேலே நடுவானில் சுற்றுலா பயணி ஒருவர் சிக்கித் தவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நந்துர்பார் மாவட்டம் தோரன்மால் பகுதியில் உள்ள சீதாகாய் பாயின்ட்டில் நடந்த இந்த சம்பவத்தில், ஆபரேட்டர்களின் துரித நடவடிக்கையால் சுற்றுலா பயணி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.