Also Watch
Read this
லண்டன் கென்சிங்டனில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டல் அறையின், குளியலறை தரையில் 29 வயது சவுதி இளவரசர் சடலமாகக் கிடந்த சம்பவம் ஏற்கெனவே சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. 2025 நவம்பர் 25ஆம் தேதி அன்று நடந்த இந்த சோகத்தின், பின்னணியில் வெளியான மருத்துவ நச்சுயியல் அறிக்கை உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. Rehab-ல் இருந்து மீண்டு வந்த பிறகும் உயிரைப் பறித்த 'Post-Rehab Relapse' பற்றிய பின்னணி என்ன?

29 வயதே ஆன இளவரசர்
சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த 29 வயதான இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் லண்டனில், Kensington பகுதியில் உள்ள Marriott Hotel அறையில் இருந்தார். ஒரு வாரம் தங்குவதற்காக, நவம்பர் 19 அன்று இந்த ஹோட்டலில் வந்து அறையை முன்பதிவு செய்திருந்தார்.

ஓட்டல் குளியல் அறையில்...
மரணமடைவதற்கு முதல் நாள் இரவு, அதாவது நவம்பர் 24ஆம் தேதி அன்று இரவு, அவர் ஹோட்டல் அறைக்கு வெளியே சிகரெட் பிடிப்பதற்காக வந்து சென்ற காட்சி CCTVல் பதிவாகி இருந்தது.

மறுநாள், 2025 நவம்பர் 25ஆம் தேதி அன்று காலை, ஹோட்டல் அறையை சுத்தம் செய்ய வந்த ஊழியர் 5ஆவது மாடியில் உள்ள அவரது அறையின் குளியலறை தரையில் இளவரசர் முழு ஆடையுடன் மயங்கிக் கிடப்பதைப் பார்த்துள்ளார். உடனடியாக அவசர மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து பரிசோதித்த போது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டது உறுதி செய்யப்பட்டது.
அறிக்கையில் அதிர்ச்சி

அளவுக்கு அதிகமான...
இந்த நச்சுப் பொருட்களின் கூட்டுப் பாதிப்பால் அவருக்குத் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு தான் மரணத்திற்கு காரணம் என, மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இது தற்கொ*யோ அல்லது கொ*யோ இல்லை. அளவுக்கு அதிகமான போதைப்பொருளை உட்கொண்டதால் ஏற்பட்ட விபத்து மரணம் என்று விசாரணை அதிகாரி ஜீன் ஹார்கின் தீர்ப்பளித்தார்.

சிகிச்சையில் இருந்து இளவரசர்
இதில், மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால், இளவரசர் தன்னுடைய போதை பழக்கத்திலிருந்து மீள தீவிர முயற்சி எடுத்திருந்தார். அவர் 2025 ஆகஸ்ட் மாதம் லண்டனில் உள்ள பிரபல Priory Hospital மற்றும் மெர்சிசைடில் உள்ள Rainford Hall ஆகிய மறுவாழ்வு மையங்களில் சேர்ந்து சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு அவரது உடலில் இருந்த நச்சுக்கள் அகற்றப்பட்டு, அக்டோபர் மாதம் தான் வெற்றிகரமாக சிகிச்சை முடித்து வெளியே வந்தார். ஆனால், சிகிச்சை முடிந்து வந்த சில நாட்களிலேயே ஏன் இந்த சோகம் நடந்தது?

இளவரசர் செய்த தவறு
இதற்குப் பின்னால் 'Post-Rehab Relapse' என்ற ஆபத்தான மருத்துவ காரணம் இருக்கிறது. ஒருவர் தொடர்ந்து போதைப்பொருளைப் பயன்படுத்தும்போது அவரது உடல் அதற்குப் பழகி 'Tolerance Level' அதிகரிக்கும். ஆனால் Rehab-ல் சிகிச்சை பெறும்போது உடலின் நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு 'Tolerance Level' முற்றிலும் குறைந்து Zero Levelக்கு வந்துவிடும். சிகிச்சை முடிந்து வெளியே வந்த பிறகு, மன அழுத்தம் அல்லது தூண்டுதலால் மீண்டும் போதைப்பொருளை எடுக்கும்போது, மூளை 'பழைய அளவுக்கே எடுக்கலாம்' என நினைக்கும். ஆனால், உடலோ அந்தப் பழைய அளவைத் தாங்கும் சக்தியை இழந்திருக்கும். சவுதி இளவரசரும் இதே தவறைத் தான் செய்துள்ளார்.

விழிப்புணர்வு வேண்டும்
detoxificationக்கு பிறகு, அவரது உடல் தாங்க முடியாத அளவுக்குப் பழைய அளவு போதைப்பொருட்களை ஒரே நேரத்தில் உட்கொண்டதால், அது Overdose ஆகி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார். அளவற்ற செல்வமும் அதிகாரமும் இருந்தாலும், போதை மறுவாழ்வு சிகிச்சைக்குப் பிந்தைய விழிப்புணர்வு இல்லையென்றால் அது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு சவுதி இளவரசரின் மரணமே சாட்சி. Rehab முடிந்த பிறகும் தொடர்ச்சியான மருத்துவ ஆலோசனைகளும் குடும்பத்தின் கண்காணிப்பும் எவ்வளவு அவசியம் என்பதை தான் இது உணர்த்துகிறது.