Also Watch
Read this
By: Manigandan Raja

காமன்வெல்த் விளையாட்டு போட்டி: ஆடவர் ஈட்டி எறிதல்
காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா, தனது முதல் முயற்சியிலேயே 79.61 மீட்டர் தூரம் வீசி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 74 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில், ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ராவுடன் இந்தியாவின் ரோஹித் யாதவ் மற்றும் யஷ்வீர் சிங்கும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள்

2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளன. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் உள்ள 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் எனவும், இதில் தென்னஆப்பிரிக்கா மட்டும் 8 மைதானங்களை வழங்கும் எனவும் ஐசிசி அறிவித்துள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா வீரர்கள் கலந்துகொணடனர். இதற்கு முன்பு, 2003-ல், தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் கென்யா ஆகிய நாடுகள் 8-வது ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை நடத்தின.