Also Watch
Read this
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று ஜூலை 31ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் காவல்துறை அதிகாரிகளுக்குப் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

600க்கும் மேற்பட்ட...
சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக காவல்துறையில் அர்ப்பணிப்புடன் மற்றும் சிறப்பாகப் பணியாற்றிய 606க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் தன் கைகளால் பதக்கங்களையும் பாராட்டுச் சான்றிதழ்களையும்
வழங்கினார்.

அணிவகுப்பு மரியாதை
விழா மைதானத்திற்கு, பட்டு வேட்டி சட்டையில் வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதை (Parade Honor) அளித்தனர்.
தொடர்ந்து, குடியரசுத் தலைவர் காவல் பதக்கம், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் இந்த விழாவில் தகுதியான அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.

புதிய வாகனங்கள் அர்ப்பணிப்பு
மேலும், சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்குப் பதக்கம் வழங்கியதோடு மட்டுமின்றி, கடலோரப் பகுதிகளில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக 42 மஹிந்திரா தார் Thar கார்கள் மற்றும் 96 ஹோண்டா யூனிகார்ன் பைக்குகளையும் காவல்துறை பயன்பாட்டிற்காக முதலமைச்சர் விஜய் வழங்கும் விதமாக, அதன் இயக்கத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.




