Also Watch
Read this
By: Manigandan Raja

ஆயுத ஒப்படைப்புக்குப் பின் இஸ்ரேல் படைகள் வெளியேறும்
காசாவில் ஹமாஸ் மற்றும் இதர ஆயுதக் குழுக்கள், தங்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை காசா அமைதி வாரியம் எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் சில கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றும், ஆயுத ஒப்படைப்புக்குப் பின் இஸ்ரேல் படைகள் காசாவில் இருந்து வெளியேறும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
மேலும், சர்வதேசப் படையும் புதிய பாலஸ்தீன காவல் படையும் இணைந்து காசாவின் பாதுகாப்பைப் பொறுப்பேற்கும் என கூறினார். இந்த ஒப்பந்தத்திற்கு எகிப்து, கத்தார், துருக்கி ஆகிய நாடுகள் முக்கிய மத்தியஸ்தர்களாக செயல்பட்டதாக கூறி நன்றி தெரிவித்தார்.
பாகிஸ்தானில் 11 பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள காவல் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் 11 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 20க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். பல மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 15தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கும், தடைசெய்யப்பட்ட பாகிஸ்தானிய தலிபான் அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மத்திய கிழக்கு போர் - இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு
மத்திய கிழக்கில் போர் தொடங்கிய பின் 10 மாலுமிகள் உள்பட 16 இந்தியர்கள் உயிரிழந்ததாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஓமனில் 8 பேர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு பேர், குவைத்தில் இருவர், சவுதி அரேபியா மற்றும் ஈராக்கில் தலா ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளில் 75 இந்தியர்கள் காயமடைந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.