news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இந்த பெயர்களுக்கு பின்னால் இவ்வளவு பெரிய ரகசியம் இருக்கிறதா?
tv

Also Watch

tv

Read this

இந்த பெயர்களுக்கு பின்னால் இவ்வளவு பெரிய ரகசியம் இருக்கிறதா?

ChatGPT, Claude, Gemini...

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ChatGPT, Claude, Gemini, Grok... நாம் தினமும் பயன்படுத்தும் இந்த AI டூல்ஸ்களுக்கு இந்த பெயர் எப்படி வந்தது?

யோசித்து வைத்ததா?
ஏதோ மார்க்கெட்டிங் ஏஜென்சீஸ் யோசித்து, ’சும்மா பேர் வச்சிருக்காங்க,’ என்று நினைத்தீர்களா? கண்டிப்பா இல்லை. இந்த ஒவ்வொரு பெயருக்கு பின்னாடியும் சயின்ஸ், கவிதை, வரலாறு என்று பெரிய ரகசியமே ஒளிந்திருக்கிறது.

'Anthropic' என்கிற வார்த்தை
ஆபீஸ் வேலை, காலேஜ் அசைன்மென்ட் என, இன்று நாம் AI உடன் வாழ பழகி விட்டோம். ஆனால், இந்த AI கம்பெனிகள் ஏன் இந்த மாதிரி பெயர்களை தேர்ந்தெடுத்தனர் என யோசித்தீர்களா?
'Anthropic' என்கிற வார்த்தை 'Anthropos' என்ற கிரேக்க சொல்லில் இருந்து வந்தது. இதற்கு "மனிதன்" அல்லது "மனிதனை மையமாகக் கொண்டது" என்று அர்த்தம். வெறும் சக்திவாய்ந்த AI மட்டும் உருவாக்காமல், மனித மதிப்புகளைப் புரிந்து கொண்டு, பாதுகாப்பாகவும் பொறுப்பாகவும் செயல்படும் AI-ஐ உருவாக்குவதே ஆந்த்திரோபிக்கின் நோக்கம்.

Related Link
இனி சாலைகளில் குண்டும் குழியும் இருக்காது, எப்படி?

இனி சாலைகளில் குண்டும் குழியும் இருக்காது, எப்படி?

ஏஐக்கு அடித்தளம்...
அடுத்து, Claude AI... இந்த AIக்கு 'Claude' என பெயர் வைக்கக் காரணம், 20ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற விஞ்ஞானி கிளாட் ஷானன் தான். இவரைத் தான் 'தகவல் கோட்பாட்டின் தந்தை,' அதாவது Father of Information Theory என அழைக்கின்றனர்.

1948ல் டேட்டாவை 'பிட்ஸ்' (bits - 0 & 1) ஆக மாற்றலாம் என்று, இவர் கண்டுபிடித்தது தான், இன்று நாம் பயன்படுத்தும் இன்டர்நெட், டிஜிட்டல் மற்றும் AI-க்கு அடித்தளம் போட்டது.

Haiku, Sonnet & Opus மாடல்களின் சுவாரசியம்:
Anthropic தன்னோட AI மாடல்களுக்கு கவிதைகளின் பெயர்களைச் சூட்டி உள்ளது.
Haiku... ஜப்பானிய பாரம்பரிய சிறு கவிதை. இது மிகவும் வேகமான, குறைந்த கணக்கீட்டு திறன் தேவைப்படும் லைட்வேட் மாடல்.
Sonnet...ஐரோப்பிய பாணியிலான 14 வரி கவிதை. இது ஹைக்கூவை விட அதிக அறிவும், கோடிங் மற்றும் கிரியேட்டிவ் திறனும் கொண்ட மாடல்.
Opus... லத்தீன் மொழியில் இதோட பொருள் "மாஸ்டர்பீஸ்" அல்லது "சிறந்த படைப்பு," இதுதான் Anthropic-ன் மிகவும் சக்திவாய்ந்த, கடினமான ஆராய்ச்சிகளைச் செய்யக்கூடிய முதன்மை AI மாடல்.

Chat + GPT
இதில் Chat என்பது உரையாடலையும், GPT என்பது Generative Pre-trained Transformer என்பதன் சுருக்கத்தையும் குறிக்கிறது. அதாவது, ஏற்கெனவே தகவல்களைக் கற்றுக்கொண்டு , மனிதர்களைப் போலவே புதிய உரையாடல்களை உருவாக்கும் ஒரு தொழில்நுட்பம் என்பதால் Open AI என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Gemini...
லத்தீன் மொழியில் 'Gemini' என்று "இரட்டையர்" என்று அர்த்தம். கூகுளின் இரண்டு பெரிய AI ஆராய்ச்சி குழுக்களான DeepMind மற்றும் Google Brain ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்து உருவாக்கியதால் இதற்கு 'Gemini' என்று பெயரிடப்பட்டு உள்ளது. மேலும், நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளி திட்டமான Project Gemini-ஐ நினைவுகூரும் வகையிலும் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான தகவல்...
தினமும் நாம் பயன்படுத்திட்டு வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பங்களுக்கு பின்னால், இவ்வளவு பெரிய வரலாறும், அறிவியலும், கவிதையும் ஒழிந்திருக்கும் என்று, கண்டிப்பாக நிறைய பேர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை எந்தளவுக்கு வேகமாக மாத்திட்டு வருதோ, அதே அளவுக்கு, அந்த தொழில்நுட்பத்துக்கு பின்னாடி இருக்கிற கதைகளும் சுவாரசியமானது தான்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இனி என் மகனுக்காக, மாதம்பட்டியும் ஜாய் கிரிஸில்டாவும்

3
1 min agoshare
இனி என் மகனுக்காக, மாதம்பட்டியும் ஜாய் கிரிஸில்டாவும்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau