news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இனி சாலைகளில் குண்டும் குழியும் இருக்காது, எப்படி?
tv

Also Watch

இனி சாலைகளில் குண்டும் குழியும் இருக்காது, எப்படி?

மலிவு விலை AI புரட்சி

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வெளிநாட்டு சாலைகள் மாதிரி நம் ஊர் சாலைகள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சுத்தமாகவும் , சீராகவும் இருப்பது இல்லை. எப்போது, எந்தப் பக்கத்தில் இருந்து யார் வருவார்கள்? எங்கே பள்ளம் இருக்கிறது என்று எதுவுமே தெரியாத அளவுக்கு ஒரே குழப்பமாக தான், நம் நகரத்தின் டிராஃபிக் உள்ளது. ஆனால், இனிமேல் டிராஃபிக் குழப்பங்களுக்கும், விபத்துகளுக்கும் ஒரு End Card போட வந்து இருக்கிறது AI.

இது எப்படி சாத்தியம்?
இதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்து, பெரிய கேமராக்கள் வைக்க தேவையில்லை. வெறும் ஒரு சாதாரண ஸ்மார்ட்போன் கேமரா இருந்தாலே போதும், சாலையில் உள்ள பள்ளத்தில் இருந்து, வண்டி ஓட்டும் டிரைவரின் கவனச் சிதறல் வரைக்கும் எல்லாவற்றையும் கச்சிதமாக கண்டுபிடித்து எச்சரிக்கும் ஒரு சூப்பர் டெக்னாலஜியை IIIT - ஹைதராபாத் கண்டுபிடித்து உள்ளது. குறிப்பாக, மிகவும் குறைந்த செலவில். இது எப்படி சாத்தியம்? இதனால் எப்படி பயன் கிடைக்கும்?

குண்டும் குழியுமான சாலைகளில்...
பொதுவாக, உலக அளவில் உருவாக்கப்படும் AI சிஸ்டம் எல்லாமே விதிகளுக்கு கட்டுப்பட்டு நேர்த்தியாக நடக்கும் டிராஃபிக்கை வைத்து தான் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கும். ஆனால், இது இந்திய சாலைகளுக்கு செட் ஆகாது. இதை மனதில் வைத்து தான், IIIT - ஹைதராபாத்தின் CVIT மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் சி.வி.ஜவஹர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஒரு புதிய AI மாடலை உருவாக்கி உள்ளது. இதன் முதன்மை நோக்கமே, ஆராய்ச்சி கூடங்களுக்குள் வேலை செய்யும் AI-ஐ விட, இந்தியாவின் குண்டும் குழியுமான சாலைகளில், சாதாரண போனில் வேலை செய்யக்கூடிய AI தான் தேவை.

வெற்றிகரமான சோதனை
இந்த தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது? ஆச்சரியம் தான். பொதுவா CCTV கேமராக்களை பார்த்தால் மக்கள் உடனே கவனமாக போகிறது போல் நடிப்பதுண்டு. அதனால், அரசுப் பேருந்து அல்லது பொதுப் போக்குவரத்து வாகனங்களில், சாதாரண மொபைல் கேமராக்களை பொறுத்தி, சென்று கொண்டு இருக்கும் போதே சாலையை AI மூலமா ஸ்கேன் செய்கின்றனர். இந்த AI சிஸ்டம் சாலையில் உள்ள பள்ளங்களை ஸ்பாட் செய்யும், டிராஃபிக் விதிகளை மீறுபவர்கள் மற்றும் தாறுமாறாக ஓடும் டூ வீலர்களை உடனுக்குடன் கண்டறியும். விலை உயர்ந்த எக்யூப்மென்ட்ஸ் எதுவும் இல்லாமல், கிட்டத்தட்ட 10 லட்சம் ஃபிரேம்கள் கொண்ட தகவல்களை வைத்து, டிரைவர் கவனம் சிதறுவதை துல்லியமாக கணிக்கும் அமைப்பையும் உருவாக்கி உள்ளனர். தற்போது இந்த தொழில்நுட்பம் தெலங்கானா மற்றும் நாக்பூரில் iRASTE என்ற திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு வருகிறது.

பாராட்டும் வரவேற்பும்
இதனால் என்னென்ன மாற்றங்கள் வரும் தெரியுமா? விபத்து அதிகமாக நடைபெறும் ஆபத்தான இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து டிரைவர்களுக்கு அலர்ட் கொடுக்கும். கோடி கோடியாக செலவு செய்து, பெரிய டிராஃபிக் கட்டமைப்பு அமைக்க தேவையில்லை. சாலையில் எங்கே பள்ளம் விழுந்தாலும், அந்த தகவல் உடனுக்குடன் அதிகாரிகளுக்கு போய்ச் சேரும். அதை உடனே சரிசெய்யவும் முடியும். ஒரு சர்வதேச அளவிலான தொழில்நுட்பப் பிரச்சனைக்கு நம் நாட்டுச் சூழலுக்கு ஏற்ப மிக எளிமையாகவும், குறைந்த செலவிலும் தீர்வை கண்டுபிடித்துள்ள IIIT - ஹைதராபாத் விஞ்ஞானிகளின் இந்த முயற்சி, இன்றைக்கு உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினரின் மிகப்பெரிய பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved