news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர்: பெண்கள் ஒற்றையர் பிரிவு
tv

Also Watch

tv

Read this

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர்: பெண்கள் ஒற்றையர் பிரிவு

யூலியா புடின்சேவா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பவுலா படேசா

ஸ்பெயின் வீராங்கனை பவுலா படேசா காலிறுதிக்கு தகுதி

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படேசா காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஜெர்மனியில் நடைபெற்று வரும் தொடரில், முன்னணி வீராங்கனைகளான ஸ்பெயினின் பவுலா படோசா, கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த சூழலில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, ஹங்கேரியின் பன்னா உத்வார்டி ஆகியோர் மோதினர். இதில், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய பவுலா படோசா 6-க்கு 4, 6-க்கு 1 என்ற செட் கணக்கில் வென்றார்.

அகில இந்திய சீனியர் ரேங்கிங் பாட்மிண்டன் போட்டி 

அகில இந்திய சீனியர் ரேங்கிங் பாட்மிண்டன் போட்டியில் தமிழகம் 2 தங்கம் வென்று அசத்தியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 8 நாள்கள் நடைபெற்ற இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு இரு பிரிவுகளில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் ஷ்ரேயா பாலாஜி - விமல்ராஜ் அண்ணாதுரை ஜோடி தங்கம் வென்றனர். அதேபோல, மகளிர் இரட்டையர் பிரிவில் நயனா ஓயாஸிஸ் - வி.எஸ்.வர்ஷிணி ஜோடி தங்கம் வென்றனர்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 2-வது டெஸ்ட் போட்டி 

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 2-வது டெஸ்ட் போட்டியில் 211 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி தொடரையும் 1-க்கு 0 என கைப்பற்றியது. இலங்கையில் நடைபெற்ற முதல் போட்டி சமனில் முடிந்தது.

கொழும்புவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 411 ரன்களும், இலங்கை 148 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 260 ரன்களுக்கு சுருண்டது. ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி டெஸ்ட் தொடரில் பதிலடி தந்துள்ளது.

Related Link
ரோகித் சர்மா, விராட் கோலியை யாராலும் நீக்க முடியாது

ரோகித் சர்மா, விராட் கோலியை யாராலும் நீக்க முடியாது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நீட் தேர்வுக்கு எதிராக பா.ரஞ்சித் தலைமையில் போராட்டம்

3
11 mins agoshare
பா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau