Also Watch
Read this
By: Manigandan Raja

இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் கருத்து
ஒருநாள் அணியில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை யாராலும் நீக்க முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், நீக்க முடியாததற்கு காரணம் கோலியும், ரோகித்தும் படைத்திருக்கும் அசாதாரண சாதனைகள்தான் என தெரிவித்துள்ளார்.
மேலும், இருவருக்கும் பின்னால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளதாகவும், 2 பேரையும் பார்ப்பதற்காகவே பலர் மைதானத்திற்கு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், அவர்களை அணியில் இருந்து நீக்குவது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி தொடர்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஜிம்பாப்வேயின் ஹராரேவுக்கு சென்றடைந்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளையும், 2-வது போட்டி 25-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி 26-ம் தேதியும் நடைபெற உள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved