Also Watch
Read this
By: Manigandan Raja

ஆகஸ்ட் 15 - 30-ம் தேதி வரை உலகக்கோப்பை ஹாக்கி
அடுத்த மாதம் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் போட்டியில், மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.
"ஏ, பி, சி, டி" என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள அட்டவணையில், இந்தியா, வேல்ஸ், இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் "டி" பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் 15-ம் தேதி வேல்ஸ் அணியுடனும், 17-ம் தேதி இங்கிலாந்து அணியுடனும், 19-ம் தேதி பாகிஸ்தான் அணியுடனும் இந்திய அணி மோதுகிறது.
ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஜெர்மனியில் நடைபெற்று வரும் இப்போட்டித் தொடரில், முன்னணி வீராங்கனைகளான ஸ்பெயினின் பவுலா படோசா, கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்த சூழலில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா, ஜெர்மனியின் மோனா பார்தெல் ஆகியோர் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய புடின்சேவா 6-க்கு 2, 7-க்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
முதல் சுற்றிலேயே இந்திய வீரர் வெளியேற்றம்

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில், முதல் சுற்றிலேயே இந்திய வீரர் தோல்வி அடைந்து வெளியேறினார். சாங்சோவ் நகரில் நடைபெறும் தொடரில், இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், மலேசியாவின் லியோங் ஜன் ஹாவ் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் மலேசிய வீரர் 21-10, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். எச்.எஸ்.பிரனாய் தோல்வி அடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved