Also Watch
Read this
By: Manigandan Raja

செயற்கை நுண்ணறிவு துறையின் அமைச்சராக நியமனம்
இங்கிலாந்தில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவுத் துறையின் அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கனிஷ்க நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரின் முசாஃபர்பூரில் பிறந்த இவர், தமது 12 வயதில் இங்கிலாந்துக்கு சென்றார். தொழிலாளர் கட்சியை சேர்ந்த கனிஷ்க நாராயணன், முந்தைய கீர் ஸ்டார்மர் அமைச்சரவையில் துணை அமைச்சராக பணியாற்றி வந்தார்.
வீடுகளுக்கான மின்சார கட்டணத்தை குறைத்து அறிவிப்பு

இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆன்டி பர்ன்ஹம், முதல் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பல முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார். குறிப்பாக வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான கட்டண குறைப்பையும் அவர் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் ஒரு குடும்பம் ஆண்டுக்கு சராசரியாக 6 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும் என்றார்.