news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈரான் போர் அமெரிக்காவுக்கு ரூ.3.61லட்சம் கோடி செலவு
tv

Also Watch

ஈரான் போர் அமெரிக்காவுக்கு ரூ.3.61லட்சம் கோடி செலவு

அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிட் ஹெக்செத்

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
US Trumph

போர் நீடித்தால் ரூ.86 லட்சம் கோடியாக உயர வாய்ப்பு 

ஈரான் மீதான போருக்காக இதுவரை 3 லட்சத்து 61ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிட் ஹெக்செத் கூறியுள்ளார்.

போர் தொடர்ந்தால் ஒட்டுமொத்த நீண்டகால செலவுகள் 86 லட்சம் கோடி ரூபாய் வரை உயரக்கூடும் எனவும், கூடுதல் நிதி உடனடியாக ஒதுக்கப்படாவிட்டால் ராணுவப் பயிற்சிகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் 

சவுதி அரேபியாவுடனான சிவில் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஒப்பந்தம் மூலம் அந்நாட்டின் எல்லைக்குள் யுரேனியம் செறிவூட்டலுக்கான வாய்ப்பும் ஏற்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தம் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டித் தரக்கூடும் என கூறப்படும் அதேவேளையில், மத்திய கிழக்கில் அணு ஆயுதப் பரவல் குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது.

ஈரான் அணுசக்தித் திட்ட மலை மீது தாக்குதல் - டிரம்ப்

ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய, பிக்காக்ஸ் மலைப் பகுதியை மிக விரைவில் கடுமையாக அமெரிக்கா தாக்கும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
பிக்காக்ஸ் மலை மிகவும் பலப்படுத்தப்பட்ட ஒரு தளம் என கூறப்படுகிறது.

இங்கு மிக ஆழத்தில் இரண்டு சுரங்க வளாகங்கள் உள்ளதாகவும், இவை அமெரிக்காவிடம் உள்ள சக்திவாய்ந்த பங்கர் பஸ்டர் குண்டுகளால் அழிக்கமுடியாது என்றும் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

Related Link
அமெரிக்காவிடமிருந்து அவசரகால நிதி உதவி கோரும் பாகிஸ்தான்

அமெரிக்காவிடமிருந்து அவசரகால நிதி உதவி கோரும் பாகிஸ்தான்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதா?

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved