Also Watch
Read this
தென்காசி அருகே ஓரினச் சேர்க்கை விவகாரத்தில் 4 சிறுவர்கள் சேர்ந்து ஒரு இளைஞரை கொ* செய்த சம்பவம் அதிர வைத்துள்ளது. உடலை கிணற்றில் கல்லை கட்டி போட்ட சிறுவர்கள் தலையை மட்டும் 25 கிலோ மீட்டர் தூரம் தாண்டி சென்று புதைத்த சம்பவம் போலீசாரையே தலைசுற்ற வைத்துள்ளது.

சினிமாவில் வரும் கிளைமாக்ஸ்
திரைப்படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியை போலவே தென்காசி மாவட்டத்தில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அடுத்த வலசை கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதான மகேந்திரன். கடந்த 6ஆம் தேதி மனைவியிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற நிலையில், வீடு திரும்பாததால் எங்கெங்கோ தேடிய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடந்த 14ஆம் தேதி சேந்தமரம் காவல் நிலையத்தில் காணவில்லை என புகார் அளித்தனர். மகேந்திரன் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், கடைசியாக செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

சிக்கிய சிறுவர்கள்
முதலில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் அவர்களுடைய பாணியில் விசாரித்த போது சிறுவர்கள் அளித்த பதிலை கேட்டு செய்வதறியாது திகைத்தனர். ஓரினச் சேர்க்கையால் ஏற்பட்ட பிரச்சனையால் மகேந்திரன் தலையை துண்டித்து, கடையநல்லூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சிறிய கிணற்றில் கல்லை கட்டி போட்டதாக கூறியதை கேட்டு அதிர்ந்து போயினர். பின்னர் அவர்கள் சொன்ன இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்த போது பெரிய அதிர்ச்சி ஒன்று அவர்களுக்கே காத்திருந்தது.

மகேந்திரன் தலை எங்கே?
கொ* செய்யப்பட்ட மகேந்திரன் உடல் மட்டும் இருந்த நிலையில், தலை இல்லாததை பார்த்து செய்வதறியாது திகைத்து நின்ற போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீண்டும் சிறுவர்களிடம் தலை எங்கே உள்ளது? என்று போலீசார் கேட்க குற்றாலத்தில் இருப்பதாக கூறி அதிர வைத்துள்ளனர். கொ* செய்த இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குற்றாலத்தில் இருப்பதாக கூறினர்.

தலையை மீட்ட போலீசார்
இதையடுத்து, அவர்களை சம்பவ இடத்திற்கே போலீசார் அழைத்து சென்ற போது குற்றாலம் காவல் நிலையத்திற்கு எதிரே கலைவாணர் அரங்கத்தின் பின்புறம் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பகுதியில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, இதுவரை 3 சிறுவர்களை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஒரு சிறுவனை தேடிவருகின்றனர். ஓரினச் சேர்க்கையால் ஏற்பட்ட பிரச்சனை கொ*யில் முடிந்ததாக கூறப்படும் நிலையில், போலீசாரின் அடுக்க கட்ட விசாரணையில் கொ*க்கான முழு காரணம் என்ன?

கொ* செய்யப்பட்டவரின் தலையை மட்டும் ஏன் குற்றாலத்தில் கொண்டு போய் புதைத்தனர்? ஒரு சிறுவன் மட்டும் தப்பியது எப்படி? போன்ற கேள்விகளுக்கு முழுமையாக பதில் கிடைக்கும்.