Also Watch
Read this
By: Manigandan Raja

ஆகஸ்ட் மாதம் நடைபெறும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா, ஜடேஜா விளையாட உள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இத்தொடர், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027 சுழற்சியின் ஒரு பகுதியாகும்.இந்த டெஸ்ட் தொடருக்கான இந்தியா அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 19ம் தேதி தொடங்க உள்ளது.
ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனை: ஐசிசி அறிவிப்பு

ஜூன் மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருதை ஐசிசி அறிவித்துள்ளது. சிறந்த வீரருக்கான விருதை நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் ஸ்மித், சிறந்த வீராங்கனை விருதை இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனை டேனி வியாட் ஹாட்ஜ் ஆகியோர் வென்றுள்ளனர்.
மகளிர் விருதுக்கான போட்டியில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரீசரணியும், ஆண்களுக்கான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் இடம்பெற்றிருந்தனர்.