news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு என பிரதமர் மோடி உறுதி
tv

Also Watch

அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு என பிரதமர் மோடி உறுதி

நள்ளிரவில் வீடியோ வெளியீடு

3

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று, நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

சமூக வலைதளத்தில் வீடியோ...
இதுதொடர்பாக, தமது சமூக வலை தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி பேசி இருப்பதாவது;
வினாத்தாள் கசிவு என்பது ஒரு சிறிய விஷயம் அல்ல. இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. நமது முதன்மைப் பொறுப்பு, மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டை வீணடிக்கக் கூடாது என்பதே ஆகும்.

கடுமையான தண்டனை
அதனால் தான், 22 லட்சம் மாணவர்களுக்கான நீட் மறுதேர்வை மிகக் குறைந்த காலத்தில் நடத்தி, கடந்த ஜூலை 19 அன்று முடிவுகளையும் வெளியிட்டோம். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், நாம் இத்துடன் திருப்தியடைந்து விடக்கூடாது. எனவே தான் விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான விதிகளை உள்ளடக்கிய வரைவுச் சட்டத்தைத் தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.

விரைவில் மசோதா...
இந்த வரைவுச் சட்டம் இன்று ஜூலை 24ஆம் தேதி அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் பெற உள்ளது. வரும் திங்கள்கிழமை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்தில் இந்த மசோதாவை இரு அவைகளிலும் விரைவாக நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved