Also Watch
Read this
By: Manigandan Raja

சச்சின், சுப்மன் கில், யுவராஜ் சிங், ஷிகர் தவான் ஆதரவு
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்துக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமைதியான முறையில் போராடும் மாணவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதாகவும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு இரக்கத்துடன் செயல்பட வேண்டும் என சுப்மன் கில் மற்றும் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல, மாணவர்களின் எதிர்காலக் கனவுகள் சிதைக்கப்படக் கூடாது என யுவராஜ் சிங், இர்பான் பதான், ஷிகர் தவான் தெரிவித்துள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 2027 ஜூன் 9-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை ஓவலில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் 9 அணிகள் உள்ளன.
ஆஸ்திரேலியா, முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும் உள்ளன. வங்கதேசம் மற்றும் இந்தியா முறையே 4 மற்றும் 5-வது இடத்தில் உள்ளன. மேலும், இலங்கை, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.