Also Watch
Read this
By: Manigandan Raja

சவுதி மீது நடத்திய தாக்குதலில் ஒன்றிணைந்த குழுக்கள்?
சவுதி அரேபியாவில் இந்த வாரம் நடைபெற்ற ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள், ஈராக் பகுதிகளில் இருந்து ஹவுதி படையினரால், ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களுடன் இணைந்து நடத்தப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, சவுதியின் முக்கிய கச்சா எண்ணெய் உற்பத்தி மையமான கிழக்கு மாகாண எண்ணெய் நிலையங்களை இலக்காகத் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் குற்றம் சாட்டுகின்றன. இருப்பினும், இந்த தகவலை இதுவரை ஈரானும் ஏமனும் உறுதி செய்யவில்லை.
இரண்டு எரிவாயு கப்பல்களில் ஏற்பட்ட தீ விபத்து
எகிப்தின் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள டமியட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு எரிவாயு கப்பல்களில் ஏற்பட்ட தீ விபத்து, ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்டது என்று எகிப்து அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

அமெரிக்காவுக்குச் சொந்தமான எனெர்கோஸ் விண்டர் கப்பலை ட்ரோன் தாக்கியதால் தீப்பிடித்து, அருகிலிருந்த காஸ்லாக் சேலம் கப்பலுக்கும் தீ பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்பெயினுக்குள் சாரைசாரையாக புகுந்த மொராக்கோ நாட்டினர்
எல்லையில் சாரைசாரையாக புகுந்த மொராக்கோ நாட்டினரால்,ஸ்பெயின் நிர்வாகம் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளது. வட ஆப்பிரிக்க பகுதியான சியூடா ((Ceuta)) நகருக்குள் ஆயிரக்கணக்கான மொராக்கோ நாட்டினர் கடல்வழியாகவும் நில எல்லை வழியாகவும் நுழைந்துள்ளனர்.

இது ஸ்பெயினில் மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் மனிதவள நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த ஸ்பெயின் அரசு கூடுதல் ராணுவத்தினரையும் காவல்துறை அதிகாரிகளையும் எல்லை பகுதிக்கு அனுப்பியுள்ளது. சட்டவிரோதமாக நுழைந்தவர்களை உடனுக்குடன் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.