Also Watch
Read this
By: Manigandan Raja

தன்னை கைது செய்ய முயன்றால் தக்க பதிலடி தரப்படும்
வெளிநாடு பயணத்தின்போது தம்மை கைது செய்ய முயன்றால் பதிலடி கொடுக்க சிறப்பு படைகள் தயாராக இருப்பதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். சர்வதேச பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நேதன்யாகுவை கைது செய்ய அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நியூயார்க் மேயர் மம்தானி கோரிக்கை விடுத்திருந்த நிலையில்.
நியூயார்க் நகருக்கு பயணம் மேற்கொள்வதில் உறுதியாக உள்ளதாக நெதன்யாகு கூறினார். மம்தானி நியூயார்க் நகர மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி ஒரு தரப்பினரை யூதர்களுக்கு எதிராக திருப்பி விடுவதாக நெதன்யாகு குற்றம் சாட்டினார்.
மீத்தேன் வாயு காற்றுடன் கலந்து வெடிப்பு என தகவல்
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் நிலக்கரிச் சுரங்க வெடி விபத்தில் தொழிலாளர்கள் 32 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 25 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து சுரங்கத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 10 பேரை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் மீத்தேன் வாயு அதிக அளவில் தேங்கிய நிலையில் தீ விபத்து ஏற்பட்டதாக சுரங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.