Also Watch
Read this
By: Manigandan Raja

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டனாக நியமனம்
டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக மீண்டும் ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார். அதிக டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியை கேப்டனாக வழிநடத்திய பெருமை இவரை சேரும்.
இதுவரை இங்கிலாந்து அணியை 65 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ள ஜோ ரூட், 27 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுத் தந்த கேப்டன் என்ற பெருமையும் ஜோ ரூட்டை சேரும். கடந்த 2017 - 2022-ம் ஆண்டு இடைவெளியில் இங்கிலாந்து அணியை டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் கேப்டனாக வழிநடத்தினார்.
ரஹானே ஓய்வு: எக்ஸ் பதிவில் விராட் கோலி பாராட்டு
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரஹானேதான் தனக்கு மிகவும் பிடித்த பேட்டிங் பார்ட்னர் என விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான அஜிங்க்யா ரஹானே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், கோலி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்திய கிரிக்கெட்டுக்காக பல அதிசயங்களை ரஹானே நிகழ்த்தியுள்ளதாக பாராட்டியுள்ளார்.

மேலும், சிலிப்பில் ரஹானேவை போல கேட்ச் செய்வது மிகவும் கடினம் எனவும், அவருக்கு எல்லாம் சிறப்பாக அமைய கடவுள் அருள்புரிய வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் பிரேசில் கால்பந்து அணி நட்புறவு போட்டி
5 முறை உலகக் கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணி, அக்டோபர் 3-ம் தேதி இந்திய அணியை எதிர்த்து சர்வதேச நட்புறவு ஆட்டத்தில் விளையாட உள்ளது. கொல்கத்தாவில் நடைபெறும் இந்த போட்டியால் இந்திய கால்பந்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

உலகக் கோப்பை தொடரின்போது இந்திய ரசிகர்கள், குறிப்பாக கொல்கத்தாவில் பிரேசில் அணிக்கு உற்சாகமான ஆதரவு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு இந்தியாவில் போட்டியை நடத்தும் முயற்சியை முன்னெடுத்தது.