news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews கென் கருணாஸுக்கு காந்தாரா பட இயக்குநர் பாராட்டு
tv

Also Watch

tv

Read this

கென் கருணாஸுக்கு காந்தாரா பட இயக்குநர் பாராட்டு

கென் கருணாஸ்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கென் கருணாஸ்

யூத் திரைப்படத்தை பார்த்து விட்டு நேரில் அழைத்து பாராட்டு :

யூத் திரைப்படத்தை பார்த்த காந்தாரா பட இயக்குநர் ரிஷப் ஷெட்டி, அதன் இயக்குநரும், நடிகருமான கென் கருணாஸை நேரில் அழைத்து பாராட்டினார். ரிஷப் ஷெட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள கென் கருணாஸ், கடவுளுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் வெளியான யூத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் பாரத் கபூர் காலமானார் :

பழம்பெரும் பாலிவுட் நடிகர் பாரத் கபூர் உடல்நல குறைவால் தனது 80-வது வயதில் காலமானார். பாலிவுட்டில் 4 தலைமுறைகளுக்கும் மேலாக நடித்து புகழ் பெற்ற இவர், உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது நண்பரும் நடிகருமான அவ்தார் கில் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு :

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகும் ‘டிசி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. கடைசி நாளில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. காதல் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், 'தேவதாஸ்' என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்.

‘திரிஷ்யம் 3’ படத்தின் டீசர் நாளை வெளியீடு :

மோகன்லால் நடித்துள்ள ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து, தற்போது மூன்றாம் பாகம் உருவாகி உள்ளது. இப்படத்தில் மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில் ஆகியோர் நடித்துள்ளனர்.

Related Link
தனுஷின் 'கர' திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்

தனுஷின் 'கர' திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியா - நியூசிலாந்து இடையிலான தடையற்ற வணிக ஒப்பந்தம்

0
6 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved