Also Watch
Read this
By: Manigandan Raja

கங்கை அமரன், ரோஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பு
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகும் "லெனின் பாண்டியன்" திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
டிடி.பாலச்சந்திரன் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் கங்கை அமரன், ரோஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஷ்ரிதா ராவ், ஜார்ஜ் மரியன், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
ஆதர்ஷ குடும்பம்" திரைப்படத்தில் இருந்து புதிய வீடியோ
"ஆதர்ஷ குடும்பம்" திரைப்படத்தில் இருந்து புதிய வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. வெங்கடேஷ் - ஸ்ரீநிதி ஷெட்டி தம்பதியின் மகளாக நடிக்கும் யுவினா பார்த்தவியின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி உள்ளது.

இதில் "சம்பூர்ணா" என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் அவர், "அப்பா நான் ஒரு பையன காதலிக்கிறேன்" என்று கூறும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.வெங்கடேஷ் - திரிவிக்ரம் கூட்டணியில் உருவாகிவரும் இந்த படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கும் ரேனிகுண்டா -2
"ரேனிகுண்டா 2" திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இந்த பாடலை கவிஞர் யுகபாரதி எழுத, இசையமைப்பாளர் மனு ரவிச்சந்திரன் இசையில் பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில், ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு மற்றும் ஷாமி திலகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.