Also Watch
Read this
By: Manigandan Raja

ரூ.76 கோடி வசூலித்த DC திரைப்படம்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வமிகா கப்பி, சஞ்சனா நடிப்பில் வெளியாகி வெற்றி நடைபோடும் DC திரைப்படம் இதுவரை 76 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே லோகேஷ் கனகராஜ் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
ஓம் திரைப்பட வெளியீட்டு தேதி மாற்றம் என தகவல்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஓம் திரைப்படம் வரும் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வெளியீடு தள்ளிப்போகும் என தெரிகிறது.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைய தாமதமாகும் என்பதால் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.
'KHALIFA' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
வைசாக் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'KHALIFA' திரைப்படத்தின் டிரைலர் இணையதளத்தில் வெளியானது. பெரும் பொருட்செலவில் உருவாகிள்ள இத்திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பழிவாங்கும் திரில்லர் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள 'KHALIFA' வரும் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved