Also Watch
Read this
By: Manigandan Raja

படக்குழுவினர் மீது நடிகர் மன்சூர் அலிகான் காட்டம்
"கருப்பு" திரைப்படத்தில் தாம் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக நடகர் மன்சூர் அலிகான் படக்குழுவினரை கடுமையாக சாடியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘ஆல்பாஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், "கருப்பு" திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பை இருட்டடிப்பு செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
அந்த படத்தில் இடம்பெற்ற ‘நாங்கள் நாலு பேரு’ பாடலில் மிகவும் சிரமப்பட்டு ஆடியதாகவும், அதை நேரமின்மை காரணத்தால் படத்தில் இருந்து எடுத்திருப்பதாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியதாகவும் தெரிவித்தார்.
"அன்பில் அவன்" திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு
அசோக் செல்வன் நடித்துள்ள "அன்பில் அவன்" திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. மெட்ராஷி எழுதிய "ஆசை வரமே" பாடலை சின்மயி, கோவிந்த் வசந்தா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ளார். ஆக்ஷன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படம் வரும் செப்டம்பரில் திரைக்கு வரவுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved