Also Watch
Read this
By: Fyrose Banu

திருவண்ணாமலை மாவட்டம் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதல் சுமார் 30,000 மேற்பட்ட பக்தர்கள் ஆறு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கடும் வெயிலின் காரணமாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு மோர் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாளை ஒட்டி இன்று அதிகாலை முதலே அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

காலை முதல் தற்போது வரை சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுமார் ஆறு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று கடும் வெயிலின் காரணமாக கோவில் நிர்வாகம் சார்பில் வரிசையில் வரும் பக்தர்களுக்கு மோர் கொடுக்கப்படுகிறது குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved