Also Watch
Read this
By: Manigandan Raja

மகாராஜா படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
கடந்த 2024-ல் வெளியான நடிகர் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ரீமேக் உரிமைக்காக ஹாலிவுட் ஏஜென்சி ஒன்று அணுகியுள்ளதாகவும் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவரை வைத்து படத்தை உருவாக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் தகவல்.
விஜய் சேதுபதியின் பத்தா திரைப்படத்தின் டீசர் வெளியீடு
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள பத்தா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லி தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
எங்கும் இசை
மோகன்லால் அடுத்ததாக நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றிற்கு, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved