Also Watch
Read this
By: Manigandan Raja

அக்டோபர் 23-ல் சோனி லிவ் தளத்தில் வெளியாகிறது
ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது. கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், வரும் அக்டோபர் 23-ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் கேத்திகா சர்மா, சைத்ரா ஆச்சர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டைட்டானிக் திரைப்பட வெளியீடு மீண்டும் ஒத்திவைப்பு

கலையரசன், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘டைட்டானிக்’ திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 16-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், திரையரங்குகள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அக்டோபர் 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியானதை தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved