Also Watch
Read this
By: Manigandan Raja

சமூக வலைதள பக்கத்தில் அறிவித்த நடிகர் தனுஷ்
‘ஓம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் -2 திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி வெளியாவதால், அவர் மீதான மிகுந்த மரியாதையின் காரணமாக 'ஓம்' திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல, சூர்யாவின் திரைப்படம் வெளியாவதால் தீபாவளிக்கும் வரப்போவதில்லை எனவும், புதிய வெளியீட்டு தேதியை மிக விரைவில் அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
"ஏழு கடல் ஏழு மலை" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு
நடிகர்கள் சூரி, நிவின் பாலி இணைந்து நடித்துள்ள “ஏழு கடல் ஏழு மலை” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில், புதுமையான கதைகளத்துடன் உருவாகியுள்ள இந்த படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved