Also Watch
Read this
By: Manigandan Raja

ரசிகர்கள் மத்தியில உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கு
‘அரசன்’ படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கப் போற திரைப்படம் ‘ராஜன் வகையறா’. ‘வடசென்னை’ படத்தில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரத்தின் சிறுவயது வாழ்க்கையை மையமா வெச்சு, உருவாக இருக்கறதா தகவல் வெளியாகியிருக்கு.
இதே படத்துல கென் கருணாஸ் மற்றும் அமீரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்குறதாகவும், இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கப் போறதாவும் தகவல் வெளியாகியிருக்கு. வெற்றிமாறன் படத்தைப் பத்துன இந்த புது அப்டேட் ரசிகர்கள் மத்தியில உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கு.
ரவி மோகன் படத்திற்கு இசையமைக்கும் கெனிஷா?
தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக 'ஆன் ஆர்டினரி மேன்' என்ற திரைப்படத்தை ரவி மோகன் இயக்கிட்டு வர்றாரு. இந்த படத்துல நடிகர் யோகி பாபு ஹீரோவா நடிச்சுட்டு வர்றது ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கு.

காமெடியும் எமோஷனலும் கலந்த இந்த திரைப்படத்திற்கு பாடகியும், ரவிமோகனின் தோழியுமான கெனிஷா இசையமைப்பாளராக அறிமுகமாகப் போறதா தகவல்கள் வெளியாகியிருக்கு. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவுல வெளியாகும்னு எதிர்பார்க்கப்படுது.
மணிரத்னம் படம் பொங்கல் ரிலீஸுக்கு தயார்
தமிழ் சினிமாவுல பெரிய எதிர்பார்ப்ப ஏற்படுத்தியிருக்கற படம், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்க, மணிரத்னமும், விஜய் சேதுபதியும் இணைஞ்சிருக்கற படம்தான். மணிரத்னம் இயக்கத்துல விஜய் சேதுபதி, சாய் பல்லவி முதன்முறையா இணைந்து நடிக்கும் அந்த புதிய படத்தோட படப்ப்பிடிப்பு விறுவிறுப்பா நடந்துட்டு வருது.

இந்த நிலையில இந்த படம் வர்ற பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண மணிரத்னம் திட்டமிட்டு இருக்குறதா தகவல் வெளியாகியிருக்கு. இந்த புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறாரு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved