news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு 'லவ் பைட்' என தலைப்பு
tv

Also Watch

tv

Read this

சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு 'லவ் பைட்' என தலைப்பு

Love Bite

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
லவ் பைட்

போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு வெளியிட்டு படக்குழு அறிவிப்பு :

சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு 'லவ் பைட்' என பெயரிடப்பட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நகைச்சுவை நடிகர் சதீஷை வைத்து ‛கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் இந்த படத்தை இயக்கும் நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது காதல் உடன் கூடிய காமெடி கலந்த ஹாரர், திரில்லர் படமாக உருவாகும் என கூறப்படுகிறது.

25 ஆண்டுகளாக காணாமல் போன திரைப்படத்தின் Footage :

2 ஆயிரம் ஆண்டு இர்ஃபான் கான் மற்றும் வித்யா பாலன் நடிப்பில் உருவான ‘The Last Tenant' திரைப்படத்தின் Footage தொலைந்து போனதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த படம் வெளியாகியுள்ளது.

சார்த்தக் தாஸ்குப்தா 2000ல் இயக்கிய இந்த படத்தின் Footage தொலைந்து போனதன் காரணமாக வெளியாகாமல் இருந்தது. தற்போது இப்படத்தின் footage அடங்கிய VHS கேசட் இயக்குநரும், தயாரிப்பாளருமான சார்த்தக் தாஸ்குப்தாவிடம் கிடைத்துள்ளது. எனவே கிடைத்த படத்தை டிஜிட்டலாக மாற்றி இர்ஃபான் கானின் நினைவு நாளான ஏப்ரல் 29-ம் தேதி யூ-ட்யூபில் வெளியிட்டுள்ளார்.

‘ரணபலி' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது :

நடிகர் விஜய் தேவரகொண்டா பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துவரும் ‘ரணபலி' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் இந்த படம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னதாக ஆங்கிலேயர் இந்தியர்களை எப்படி கொடுமைப்படுத்தினார்கள், ஆங்கிலேயரிடம் இருந்து தனது மக்களை வீரமிக்க இளைஞன் காப்பாற்றும் வகையில் மறைக்கப்பட்ட வரலாற்றை மையமாக கொண்டு உருவாகி வருகிறது.

“கான் சிட்டி” திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு :

அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் “கான் சிட்டி” திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'நான் தான் கிங்' என்ற பாடல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் இந்த படத்தில் அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ, லலிதா சுதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

நடிகை ப்ரீத்தி ஜிந்தா பொற்கோயிலில் சிறப்பு வழிபாடு :

நடிகையும், ஐபிஎல் அணியான 'பஞ்சாப் கிங்ஸ்'-இன் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா, அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலான ஸ்ரீ தர்பார் சாஹிபில் வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பஞ்சாப் அணி அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்.

Related Link
துருவ நட்சத்திரம் வழக்கின் தீர்ப்பு குறித்து கௌதம் பதிவு

துருவ நட்சத்திரம் வழக்கின் தீர்ப்பு குறித்து கௌதம் பதிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
11 hrs 10 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau