news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "சீன்" திரைப்படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியீடு
tv

Also Watch

"சீன்" திரைப்படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியீடு

வீடியோ வெளியிட்டு அறிவித்தது.

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Surya

"சீன்" திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி வெளியாகும்

நடிகர் சூர்யா நடிக்கும் "சீன்" திரைப்படக்குழு, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவித்து சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளம், சென்னை பகுதிகளில் நடைபெற்று சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தது. இந்த படம் நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விநாயகர் சதுர்த்தி: "ஓம்" படக்குழு சிறப்பு போஸ்டர்

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, நடிகர் தனுஷ் நடிக்கும் "ஓம்" திரைப்படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி, மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி, பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இந்த படம், அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கருணாஸ் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம்

நிமிஷா சஜயன், கருணாஸ் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகி உள்ளது. கார்த்திக் நேத்தா எழுதிய ‘வான் மீற’ பாடலை ஜிவி பிரகாஷ் இசையில் சிவம் பாடியுள்ளார்.


கலமாயா சினிவெர்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் 4 விருதுகளை வென்றுள்ளது.

Related Link
நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள "மண்டாடி" திரைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆ.ராசா மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved