Also Watch
Read this
By: Web Team

தென்காசியில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
ஜெய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த படத்திற்கு தற்காலிகமாக "தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்" என பெயரிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார்.
மோகன் ஜி பேச்சுக்கு கார்த்திக் சுப்புராஜ் கண்டனம்

‘டோரதி’ படத்தை முன்வைத்து திருநங்கைகள் குறித்து சர்ச்சையாக பேசிய மோகன் ஜி-க்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், எப்படி ஒரு மதரீதியான, சாதிரீதியான பேச்சுகளுக்கு சட்டரீதியான நடவடிக்கைகள் உள்ளனவோ அதே போல பாலின ரீதியாக ஒருவரை அவமதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved