Also Watch
Read this
By: Manigandan Raja

கண்ணியமாக வாழ நினைக்கும் இளைஞனின் கதை
சந்தோஷ் குமார் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் உருவாகி வரும் 'மக்கள் காவலன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. கண்ணியமாக வாழ நினைக்கும் சாதாரணை இளைஞனை மையப்படுத்தி திரைப்படம் உருவாகி வருகிறது.
நீலம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மக்கள் காவலன், டிசம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆதி நடிப்பில் உருவாகி வரும் மரகத நாணயம்-2
சரவணன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகி வந்த மரகத நாணயம்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் நிறைவுபெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. முதல் பாகத்தில் நடித்திருந்த நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோரும் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

நவம்பர் 20-ல் வெளியாகும் தனுஷின் 'ஓம்' திரைப்படம்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் ஓம் திரைப்படம் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் 16ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜெயிலர்-2 படத்துடனான மோதலை தவிர்க்க வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved