Also Watch
Read this
By: Manigandan Raja

6 நாட்களில் இத்தனை கோடியா?
அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், Youtuber சுதாகர், பகத் பாசில், நிஹாரிகா, ஏஞ்சலின், Youtuber டிராவிட் உள்ளிட்ட பலர் நடித்த இதயம் முரளி படம் ஜூலை 10-ம் தேதி வெளியாகிருந்துச்சு.
தமன் இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை சந்திச்சு வந்த நிலையில், படம் வெளியான 6 நாட்களில் செய்துள்ள வசூல் விவரம் தற்போது வெளியாகிருக்கு. அதன் படி, இந்த படம் வெளியான 6 நாட்களில் 18 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகிருக்கு.
தனுஷின் 56வது படத்தில் இளம் நடிகை?

லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தனுஷின் 56வது படத்தை இயக்க இருக்கிறாரு. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் மதுரையில் துவங்க உள்ளதாகவும் படத்தின் நாயகியாக ருக்மணி வசந்த்தை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்ததாகவும் தகவல் வெளியாகிருந்துச்சு.
இதன் பின் வெளியான தகவலில், பிரசாந்த் நீல் ஜுனியர் என்டிஆர் திரைப்படத்திற்காக ருக்மணி வசந்த் அதிக நாட்கள் ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் இந்த படத்திலிருந்து விலகியதாக சொல்லப்பட்டுருந்துச்சு. இந்த நிலையில், பிளாஸ்ட் வெற்றி, இதயம் முரளி வெற்றி என வெற்றி முகத்தை கொண்ட இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தனிடம் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகிருக்கு.
ஹைவான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அக்சய் குமார் - சயில் அலிகான் நடிப்பில் திரில்லர் திரைப்படமா உருவாகி வரும் ஹைவான் (Haiwaan) திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுட்டு வருது.
இந்த படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றியடைந்த 'ஒப்பம்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்-ஆ உருவாகி வருது. அதே மாதிரி, இந்த ஹைவான் (Haiwaan) திரைப்படம் வருகிற செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கு என்பது குறிப்பிடத்தக்கது.