news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்"
tv

Also Watch

tv

Read this

"தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்"

இம்மோர்டல்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Immortal

அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில் உருவான 'இம்மோர்டல்' ( Immortal ) திரைப்படம் ஜூலை 23-ம் தேதி வெளியாகும்னு படக்குழு அறிவிச்சிருந்தாங்க. ஆனா அந்த தேதியில், ஜனநாயகன் படம் வெளியாக இருப்பதால் படத்தின் வெளியீடு குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜீவி பிரகாஷ் தனது x-தள பக்கத்தில் ஒரு பதிவு போட்டுருக்காரு.

அதில், "தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்".. அதுவும் one last time.. ஜனநாயகன் குழுவுக்கு என்னோட வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டு 'இம்மோர்டல்' ( Immortal ) படம் செப்டம்பர் 4-ம் தேதி வெளியாகும் என்று பதிவு செய்திருக்கிறாரு.

அரசன் படத்துக்காக உடலை செதுக்கும் STR


வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துவரும் 'அரசன்' படத்தின் படப்பிடிப்பிற்கு, தற்போது தற்காலிக இடைவெளி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிருக்கு.

இதற்கான காரணமா, படத்தின் அடுத்தகட்ட காட்சிகளில் இளமையான தோற்றத்தில் STR நடிக்க வேண்டியிருப்பதால், மேலும் 5 கிலோ உடல் எடையை குறைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும், இதற்காக அவர் துபாயில் தங்கியிருந்து தீவிர உடற்பயிற்சி மற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாவும் தகவல் வெளியாகிருக்கு. அதே மாதிரி, இந்த படத்தில் STR, இளம் வயது கேங்ஸ்டரிலிருந்து வயதான கேங்ஸ்டர் வரை பல்வேறு தோற்றங்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுது.

"பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகனே"


விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி, ஃபீனிக்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிருந்தாரு. இந்த படத்திற்கு முன்பு, சிறுவயதில் தனது தந்தை நடித்த நானும் ரௌடிதான், சிந்துபாத், விடுதலை பாகம் 2 மற்றும் நடுசென்டர் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிச்சிருந்தாரு.

இந்த நிலையில், நேற்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் மகனின் பிறந்தநாளை விஜய் சேதுபதி கேக் வெட்டி கொண்டாடிருக்கிறாரு. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கவனம் பெற்றுட்டு வருது.

Related Link
தண்ணீருக்கு அடியில் 20 மணி நேரம், நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் ஸ்டண்ட்

தண்ணீருக்கு அடியில் 20 மணி நேரம், நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் ஸ்டண்ட்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு மருத்துவமனை பழைய கட்டிடத்தை பராமரிக்க கோரிக்கை

0
3 mins agoshare
அரசு மருத்துவமனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau