news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தண்ணீருக்கு அடியில் 20 மணி நேரம், நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் ஸ்டண்ட்
tv

Also Watch

tv

Read this

தண்ணீருக்கு அடியில் 20 மணி நேரம், நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் ஸ்டண்ட்

ஆச்சரியப்படவைக்கும் ஆர்வம்...

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தண்ணீருக்கு அடியில் 20 மணி நேரம் இருந்து, நடிகை ராஷ்மிகா மந்தனா ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

தண்ணீருக்கு அடியில்...
பொதுவாகவே, ஹாலிவுட் படங்களில் தான் டூப் போடாமல் தண்ணீருக்கு அடியில் சண்டை போடும் சாகசக் காட்சிகளைப் பார்த்து வியந்திருப்போம். இந்திய சினிமாவில் கூட இதுவரை கதாநாயகர்கள் மட்டுமே இதுபோன்ற முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள்.

ஆனால், இந்த வரலாற்றையே இப்போது மாற்றி எழுதியிருக்கிறார் நம் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா. இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரு பெண் கதாபாத்திரம் முன்னின்று நடத்தும் தண்ணீருக்கு அடியிலான பிரம்மாண்ட சண்டைக்காட்சியில் நடித்து அசத்தியிருக்கிறார் ராஷ்மிகா.

2 நாட்கள், 20 மணி நேரம்...
’மைசா’ என்று பெயரிடப்பட்டுள்ள தனது புதிய திரைப்படத்திற்காகத் தான் ராஷ்மிகா இந்த அசாத்தியமான முயற்சியை கையில் எடுத்துள்ளார். ரவீந்திர புல்லே இயக்கத்தில், ‘அன்பார்முலா ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம், பழங்குடியின மக்களின் பின்னணியில் பயணிக்கும் ஒரு எமோஷனல் ஆக்சன் த்ரில்லர் படம்.

இப்படத்தின் மிக முக்கியக் காட்சியாக கருதப்படும் இந்த அண்டர் வாட்டர் ஆக்சன் சீக்வென்ஸை, ரஷ்மிகா எந்தவொரு டூப் அல்லது Action Double உதவியும் இல்லாமல், முழுக்க முழுக்க அவரே தத்ரூபமாகச் செய்து முடித்துள்ளார். இந்த சவாலான காட்சிக்காக ரஷ்மிகா மந்தனா தொடர்ந்து இரண்டு நாட்கள், கிட்டத்தட்ட 20 மணி நேரம் தண்ணீருக்கு அடியில் செலவிட்டுள்ளார் என்ற வியப்பூட்டும் தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளனர்.

பார்க்க தயார் ஆகுங்கள்...
இதுதொடர்பான பிஹைண்ட் த சீன்ஸ் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள படக்குழு, "இந்தியாவின் முதல் பெண் கதாபாத்திர அண்டர் வாட்டர் சண்டைக்காட்சி இது. நீர்மட்டம் என்பது ஒரு எல்லையே இல்லை. இந்திய சினிமா இதுவரை கண்டிராத ஒரு போர் இது. ரஷ்மிகாவின் இந்த ஆக்ரோஷமான ஆக்சனைப் பார்க்கத் தயாராகுங்கள்" என்று தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

என் திரைப் பயணத்திலேயே...
இதற்கிடையில், இந்த அனுபவம் குறித்து நடிகை ரஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். அதில், "நான் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லைதான், ஆனால் அதற்குப் பின்னால் இப்படிப்பட்ட ஒரு கடின உழைப்பு இருக்கிறது.

என் திரைப்பயணத்திலேயே, ஏன் என் வாழ்க்கையிலேயே நான் செய்த மிகச் சவாலான காரியம் இதுதான். இதற்காக நாங்கள் பைத்தியக்காரத்தனமாக உழைத்திருக்கிறோம், அதுதான் என்னை இந்த அளவுக்கு உற்சாகப்படுத்தியிருக்கிறது, லெட்ஸ் கோ, மைசா," என்று பதிவிட்டுள்ளார்.

பிரம்மாண்டமாக...
ரஷ்மிகா மந்தனாவின் திரையுலக வாழ்க்கையில், அவர் சோலோவாக முன்னின்று நடிக்கும் முதல் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் இந்த ‘மைசா’ என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகையுமே திரும்பிப் பார்க்க வைத்துள்ள இத்திரைப்படம், விரைவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Link
ஜூலை 23-ல் ரிலீஸ் ஆகும் ஜனநாயகன்

ஜூலை 23-ல் ரிலீஸ் ஆகும் ஜனநாயகன்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரவோடு இரவாக மனைவிக்கு விபரீதம், மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம்

5
10 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau