news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கால்பந்து உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார்?
tv

Also Watch

tv

Read this

கால்பந்து உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார்?

இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இறுதிப் போட்டிக்கு அர்ஜெண்டினா அணி முன்னேறியது.

மைதானத்தில் உற்சாகம்...
விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அபார ஆட்டத் திறனை வெளிப்படுத்திய லியோனல் மெஸ்ஸிக்கு பாராட்டு குவிகிறது. அர்ஜெண்டினா அடித்த இரண்டு கோலுக்கும் உதவியாக இருந்ததால் ரசிகர்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதால் கட்டித் தழுவியும், துள்ளிக்குதித்தும் மகிழ்ச்சியை அர்ஜெண்டினா வீரர்கள் வெளிப்படுத்தினர். மைதானத்தில் வெள்ளமெனத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

அர்ஜெண்டினா அணி மீது புகார்
உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டியில் கடைசி வரை கடுமையாகப் போராடிய இங்கிலாந்து வீரர்கள், உலக கோப்பை அரையிறுதி வெற்றி கொண்டாட்டங்களில் விதிகளை மீறியதாக அர்ஜெண்டினா அணி மீது புகார் அளித்தனர். மெர்சி தலைமையிலான கால்பந்து அணிக்கு எதிராக பிபா அமைப்பு நடவடிக்கை எடுக்குமென தகவல் வெளியாகி உள்ளது.

சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார்?
23ஆவது உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் 2 - 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா அணி. நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் முன்னேறியுள்ள நிலையில், இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் திங்களன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்- அர்ஜெண்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அரையிறுதி போட்டியில்...
உலக கோப்பை அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் ஆரம்பம் முதல் இரு அணிகளும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டின. 2 அணிகளும் அபாரமான தற்காப்பு ஆட்டத்தை கையாண்டது. இதனாலேயே, முதல் பாதி சமனில் முடிந்தது. இரண்டாம் பாதி தொடங்கியவுடன் அர்ஜென்டினாவின் ரொமேரோவிற்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.

முதல் கோல்...
இங்கிலாந்து வீரர் ஆண்டனி கோர்டன், மோர்கன் ரோஜர்ஸ் உதவியுடன் முதல் கோல் அடித்தார். இதற்கு அர்ஜென்டினா பதிலடி கொடுக்க முயன்ற நிலையில், இங்கிலாந்து அணி அசாத்தியமான defence ஆட்டத்தை முன் வைத்தது. ஆனால், 70ஆவது நிமிடத்திற்கு பிறகு ஆட்டம் அர்ஜென்டினா அணி பக்கம் திரும்பியது.

வந்தார் மெஸ்சி
85ஆவது நிமிடத்தில் அந்த அணியின் என்சோ பெர்னாண்டஸ் மெஸ்ஸியின் நகர்வு மூலம் முதல் கோல் அடித்தார். பின்னர் கூடுதல் நேரத்த்தில் மீண்டும் மெஸ்ஸியின் அபாரமான நகர்வு மூலம் லாவ்டரோ மார்டினேஸ் இரண்டாவது கோல் அடித்தார்.

இதன்மூலம் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து அணி கடைசி நேரத்தில் மோசமான டிஃபன்ஸ் ஆட்டத்தால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை நழுவவிட்டது. இங்கிலாந்து அணி 60 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது.

Related Link
பிஃபா உலக கோப்பை கால்பந்து 2ஆவது அரையிறுதியில் யார்?

பிஃபா உலக கோப்பை கால்பந்து 2ஆவது அரையிறுதியில் யார்?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடித்துக்கொண்ட காங். பழுத்த நிர்வாகிகள், என்ன நடந்தது?

4
38 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau