news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வரும் 17ஆம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும், வானிலை எச்சரிக்கை
tv

Also Watch

வரும் 17ஆம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும், வானிலை எச்சரிக்கை

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக...

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில் வருகிற 17ஆம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வறண்ட வானிலை 
இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது;
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூலை 16ஆம் தேதி இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஜூலை 17
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 18
மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 19, 20
தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 21
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் வரை உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.

ஜூலை 16
திருப்பத்தூர்
வேலூர்
ராணிப்பேட்டை
கள்ளக்குறிச்சி
திருவண்ணாமலை
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
தர்மபுரி
சேலம்
நாமக்கல்
கரூர்
ஈரோடு
திருச்சிராப்பள்ளி
அரியலூர்
பெரம்பலூர்
சிவகங்கை
விருதுநகர்
திண்டுக்கல்
மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

ஜூலை 17
விருதுநகர்
சிவகங்கை
மதுரை
திண்டுக்கல்
கரூர்
நாமக்கல்
ஈரோடு மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்...
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும்.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Link
தவெக எம்.எல்.ஏ.வை வளைக்க மெகா ஸ்கெட்ச், சிக்கிய திமுக புள்ளி

தவெக எம்.எல்.ஏ.வை வளைக்க மெகா ஸ்கெட்ச், சிக்கிய திமுக புள்ளி

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved