Also Watch
Read this
By: Manigandan Raja

டீசர் நாளை வெளியாகும் என தகவல் :
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹாரி பாட்டர் சீரிஸின் புதிய வெர்ஷன் First Look புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஜே.கே. ரௌலிங்கின் நாவல்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த தொடரில், ஹாரி பாட்டர் கதாபாத்திரத்தில் டொமினிக் மெக்லாலின் நடிக்கிறார்.
வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இத்தொடரின் படப்பிடிப்பு, ஹாரி பாட்டர் உலகத்தை மீண்டும் திரையில் காண காத்திருக்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், தொடரின், டீசர் மற்றும் முக்கிய அப்டேட்கள் நாளை வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved