Also Watch
Read this
By: Manigandan Raja

"உஸ்தாத் பகத் சிங்" :
பவன் கல்யாண் நடித்துள்ள "உஸ்தாத் பகத் சிங்" திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் "யு/ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளது. துணை முதல்வராக பதவியேற்ற பிறகு நடிப்பதை நிறுத்தி வைத்திருந்த பவன் கல்யாண், தயாரிப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு "ஹரிஹர வீர மல்லு", "ஓஜி" ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
தற்போது, மைத்ரி மூவி மேக்கரஸ் நிறுவனம் தயாரிக்கும் "உஸ்தாத் பகத்சிங்" திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். கதாநாயகிகளாக ஸ்ரீலீலா, ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.