Also Watch
Read this
By: Manigandan Raja

காந்தா கதாபாத்திரத்தில் வித்யா பாலன்- படக்குழு தகவல்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில், நடிகை வித்யா பாலனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தில், வித்யா பாலன் ‘காந்தா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரசிகர்கள் பாராட்டு மழையில் மண்டாடி
மண்டாடி திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், மதுரை மாவட்டம் ராஜாக்கூரில் நடிகர் சூரி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திரைப்பட வெற்றியை கொண்டாடினார். அப்போது ஊர் மக்கள் மற்றும் சிறுவர்களுடன் இணைந்து நடிகர் சூரி கேக் வெட்டி மகிழ்ந்தார்.

ஓடிடி தளத்திலும் வரவேற்பை பெற்ற 'மொத ராத்திரி'
கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'மொத ராத்திரி' திரைப்படம் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி டிரண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. ராஜா குப்புசாமி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved